"அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

x

"அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


அனைத்து மாவட்டங்களும் சீராக வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.


கொங்கு மண்டலத்துக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் சிறு, குறு, தொழில்துறை மண்டல மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, கோவையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதேபோல், தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம், தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி செயல்முறை தளம் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். கோவை மாவட்டம் சொலவம்பாளையத்தில் தொழிற்பேட்டை, சேலத்தில் வெள்ளி கொலுசு பொது வசதி மையம் அமைப்பதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருப்பதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்