மேட்ரிட் டென்னிஸ் தொடர் அதிரடியாக ஆடி 3வது சுற்றுக்கு முன்னேறிய அல்கராஸ்..!

மேட்ரிட் டென்னிஸ் தொடர் அதிரடியாக ஆடி 3வது சுற்றுக்கு முன்னேறிய அல்கராஸ்..!
Published on

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் 3ம் சுற்றுக்கு ஸ்பெயின் இளம் வீரர் அல்கராஸ் தகுதி பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றுப் போட்டியில் பின்லாந்து வீரர் எமில் ருசுவோரி உடன் அல்கராஸ் மோதினார். இதில் முதல் செட்டை 2க்கு 6 என்ற கணக்கில் பின்லாந்து வீரரிடம் இழந்த அல்கராஸ், 2வது செட்டில் சுதாரித்து ஆடி, 6க்கு 4 என்ற கணக்கில் அதனை தனதாக்கினார். தொடந்து 3வது செட்டில் அதிரடியாக ஆடிய அல்கராஸ், 6க்கு 2 என்ற கணக்கில் அந்த செட்டை வென்று, 3ம் சுற்றுக்குள் நுழைந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com