2024 தேர்தலில் காந்தியின் குடும்ப தொகுதியில் போட்டி - அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

x

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

காந்தி குடும்பத்தின் தொகுதியாக அறியப்பட்ட உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில், காங்கிரஸ் கட்சியே போட்டியிட்டு வந்தது. ராஜீவ் காந்தி தொடங்கி, சோனியா, ராகுல் என அனைவரும் இந்த தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வாகியிருந்தனர். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தற்போது மத்திய அமைச்சராக உள்ள பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியுற்றிருந்தார். இந்நிலையில், அமேதியில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ள அகிலேஷ், 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அமேதியில் சமாஜ்வாடி கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்