ஆகாஷ் ஏவுகணைகள்.. 12 ரேடார்கள்.. முழுக்க முழுக்க இந்தியாவின் தயாரிப்பு... மாஸ் காட்டும் பாதுகாப்பு அமைச்சகம்

x

9 ஆயிரத்து நூறு கோடியில் தரம் உயர்த்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள், 12 ரேடார் கருவிகளை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடையும் வகையில், பாரத் டைனமிக் லிமிட்டேட் நிறுவனத்திடம் ஆகாஷ் ஏவுகணைக்கானஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 8 ஆயிரத்து 160 கோடி ரூபாயாகும் வான்வழி ஊடுருவல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஏதுவாக, இந்த ஆகாஷ் ஏவுகணை தரம் உயர்த்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு எல்லைகளில் ராணுவப் பயன்பாட்டிற்காக இவை கொள்முதல் செய்யப்படுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்