அஜித் பவர் என்ட்ரி..!முறிகிறதா பாஜக-சிவசேனா கூட்டணி ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு பதில்

அஜித் பவார் வருகை மூலம் அரசு மேலும் வலுவடைந்துள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் அஜித் பவார் இணைந்திருப்பதை அடுத்து ஏக்நாத் ஷிண்டே ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், ஏக்நாத் ஷிண்டே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இது குறித்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இல்லை என்றும், அஜித் பவார் இணைந்ததன் மூலம், தங்களது அரசு மேலும் வலுவடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ராஜினாமா குறித்த வதந்திகளையும் அவர் மறுத்துள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com