"தட்டிக்கேட்ட என்னை போட்டு அடிஅடினு அடிச்சிட்டானுங்க சார்"-அஜித் ரசிகர்களால் தியேட்டர் மேனேஜர் கதறல்

x

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள பிரபல திரையரங்கில், அஜித்தின் துணிவு திரைப்படம் இன்று வெளியானது.

இந்தநிலையில் படத்தை காண அத்திரையரங்கில் ரசிகர்கள் குவிந்த நிலையில், போதையில் சிலர் திரையரங்கு கதவை திறக்குமாறு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து திரையரங்கின் மேலாளர் பிரபாகரன், அவர்களிடம் பேச சென்றுள்ளார்.

அப்போது அவர்கள், பிரபாகரனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ரகளையில் ஈடுபட்டவர்களை விரட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்