"அம்மா, அப்பா வேண்டாம்..அஜித் தான் வேணும்" - மருத்துவமனையில் ரசிகர் அட்ராசிட்டி

x

அப்பா அம்மா வேண்டாம்...அஜித் தான் வேண்டும் என்று மருத்துவமனையில் அடம்பிடித்த அஜித் ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.


சேலம் திரையரங்கில் துணிவு படம் அதிகாலை ஒரு மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்துள்ள காட்டு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்ற இளைஞர் திரையரங்கில் கதவின் மீது ஏறி உள்ளார்.

கால் தவறி கீழே விழுந்தால் பிரதீப்பிற்கு காலில் அடிபட்டதாக நினைத்து, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரதீப் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவில் இருந்து கொண்டு அல்டிமேட் ஸ்டார் அஜித் வாழ்க, துணிவு வாழ்க என கூச்சலிட்டதோடு, தனக்கு அம்மா அப்பா கூட வேண்டாம் என்றும் அஜித் குமார் தான் வேண்டும் என்று அட்ராசிட்டி செய்த பிரதீப்பால் மருத்துவமனை கதிகலங்கிப் போனது.


Next Story

மேலும் செய்திகள்