சரத் பவாருடன் அஜித் பவார் திடீர் சந்திப்பு - மராட்டிய அரசியலில் பரபரப்பு

x

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அமைச்சர்கள் சிலர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை திடீரென சந்தித்து பேசியது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணியில் இணைந்தார். அதன்பின்னர், துணை முதலமைச்சராக அஜித் பவாரும், சிலர் அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். இந்நிலையில், மும்பையில் உள்ள ஒய்.பி.சவான் மையத்தில் சரத் பவாரை, அஜித் பவார், பிரஃபுல் படேல் மற்றும் அமைச்சர்கள் சிலர் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார் அணி மூத்த தலைவர் பிரஃபுல் படேல், சரத் பவாரிடம் ஆசிர்வாதத்தைப் பெற்று, தேசியவாத காங்கிரஸ் ஒரே கட்சியாக நீடிக்க வேண்டும் என்று தங்களது விருப்பத்தைத் தெரிவித்த‌தாக கூறினார். அவருடைய வழிகாட்டுதலைப் பெற சென்றதாகவும், சரத் பவர் எந்த எதிர்வினையும் தெரிவிக்காமல் தங்களது கருத்துக்களை கேட்டதாகவும் தெரிவித்தார். சரத் ​​பவார் மற்றும் அஜித் பவார் அணியினர் முதல்முறையாக சந்தித்த‌தால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்