ஷரத் பவாரை முதுகில் குத்திய அஜித் பவார் - டெல்லியில் ஓட்டப்பட்ட போஸ்டர்கள்

x

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு தேசிய அரசியலில் விவாத பொருளாகியுள்ளது. சரத்பவார் தரப்பும், அஜித்பவார் தரப்பும் ஒருவர் மீது ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் அஜித் பவாரை துரோகியாக சித்தரித்து டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் அலுவலகம் முன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஷரத் பவாரை பிரபாஸாகவும் அஜித் பவாரை கட்டப்பாவாகவும் சித்தரித்து, ஷரத் பவாரின் முதுகில் அஜித் பவார் குத்துவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் உங்களின் துரோகத்தை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என அந்த போஸ்டர்களில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்