சென்னையில் 5ஜி சேவையை தொடங்கியது ஏர்டெல்.. யாரெல்லாம் சேவையை பெறலாம்? சிம்மை மாற்ற வேண்டுமா?

x

சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசியில் உள்ள வாடிக்கையாளர்கள் பெறலாம் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் படிப்படியாக 5G பிளஸ் சேவையை பெறலாம் என தெரிவித் திருக்கும் ஏர்டெல் நிறுவனம், 2023 டிசம்பருக்குள் நாடு முழுவதும் உள்ள நகர்புற பகுதிகளில் சேவையை வழங்கு வோம் என தெரிவித்துள்ளது.

ஏர்டெல் 5-ஜி பிளசில் நெட்வேகம் இப்போது இருப்பதைவிட 30, 40 மடங்கு அதிகமாக இருக்கும்; வாடிக்கையாளர்களுக்கு சிறந்த குரல் அனுபவத்தை வழங்கும் என ஏர்டெல் உறுதி யளித்துள்ளது. அனைத்து 5-ஜி ஸ்மார்ட் போன்களிலும் தங்கள் சேவையை பெறலாம்; அந்த வாடிக்கையாளர்கள் தற்போது செய்திருக்கும் டேட்டா பேக்கேஜ் ரீசார்ஜ் திட்டத்திலேயே 5G சேவையை பெறலாம்;

வாடிக்கையாளர்கள் சிம் மாற்றம் செய்ய தேவையில்லை, தற்போதுள்ள ஏர்டெல் 4-ஜி சிம் கார்டு 5-ஜியாக இயக்கப் படவுள்ளது என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

"படிப்படியாக 5G பிளஸ்

சேவையை பெறலாம்"

"2023-க்குள் நாடு முழுவதும்

நகர்புற பகுதிகளில் 5G சேவை"

"நெட்வேகம் இப்போது இருப்பதைவிட

30, 40 மடங்கு அதிகமாக இருக்கும்"

"வாடிக்கையாளர்கள் சிறந்த குரல்

அனுபவத்தை 5G சேவை வழங்கும்"


Next Story

மேலும் செய்திகள்