காணாமல் போன விமானம்.. தண்ணீரில் கண்டெடுத்த உடைந்த பாகங்கள் - பயணிகள் உயிரிழந்திருக்க வாய்ப்பு..?

x

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கோஸ்டாரிகா கடற்கரைக்கு சற்று அப்பால் கரீபியன் தீவில், ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஜெர்மன் தொழிலதிபர் உட்பட 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை விமானம் காணாமல் போனதை அடுத்து, இரட்டை எஞ்சின் கொண்ட "டர்போபிராப்" விமானத்தின் உடைந்த துண்டுகள் தண்ணீரில் கண்டெடுக்கப்பட்டதாக கோஸ்டாரிகா அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் யாருடைய உடலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்