"எய்ம்ஸ் கல்லூரிகளில் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டாம்" - தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

x

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களை எய்ம்ஸ் கல்லூரிகளில் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டாம் என, மாநில மருத்துவக் கவுன்சில்களை தேசிய மருத்துவ ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.


இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்கள், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கின்றனர். வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், FMGE தேர்வில் தேர்ச்சி பெற்று, ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றி, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த பிறகே இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற முடியும். இந்நிலையில், வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு உள்ளுறைப் பயிற்சி அளிப்பதில் இருந்து, எய்ம்ஸ் கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது. எய்ம்ஸ் கல்லூரிகள் என்.எம்.சி.யின் கட்டுப்பாட்டின்கீழ் வரவில்லை என்பதால், உள்ளுறை பயிற்சிகளுக்கு இடங்கள் ஒதுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்