சிவகங்கையில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக, ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...

• சிவகங்கையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. • இதற்காக நகர் முழுவதும் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக, அதிமுக நகர செயலாளர் உட்பட 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். • அதேபோல, ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில், அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர் வைத்ததாக தெரிகிறது. • இது தொடர்பாக, ஓபிஎஸ் அணியின் நகர செயலாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com