அரசு நிலத்தில் 'தோட்டக்கலைச் சங்கம்' அமைப்பை உருவாக்கிய அதிமுக பிரமுகர் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

சென்னையில் 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டி கதிட்ரல் சாலையில், அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான கிருஷ்ணமூர்த்தி, 'தோட்டக்கலைச் சங்கம்' என்ற ஒரு அமைப்பை உருவாக்கி பயன்படுத்தி வந்தார். இந்த நிலம் மீட்கப்பட்ட நிலையில், நிலத்திற்கு எதிரில் 6 புள்ளி 36 ஏக்கர் நிலத்தில் இருந்த தோட்டக்கலை சங்கத்தை காலி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, நிலத்தை அரசு எடுக்கும் நடவடிக்கையில் தலையிட முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தது.


Next Story

மேலும் செய்திகள்