அதிமுகவின் நிறுவனத் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ராமசந்திரன் மறைந்த தினம் இன்று.

x

1917ல் இலங்கையின் கண்டியில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்த எம்.ஜி.ஆர், இளம் வயதில் தந்தையை இழந்தார். பின்னர், தாயார் மற்றும் மூத்த சகோதாரருடன் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார்.

குடும்ப வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியாமல், சகோதரர் சக்கரபாணியுடன் நாடக் குழுவில் சேர்ந்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவம் பெற்ற நிலைமையில் 1936ல் சதி லீலாவதி படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

1947ல் கருணாநிதி வசனத்தில் வெளியான ராஜகுமாரி படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழ் திரைபட

உலகின் முன்னணி கதாநாயகனாக வலம்வந்தார்.

தேசிய உணர்வு மிகுந்த எம்ஜிஆர் ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் அண்ணாவின் கொளைகளினால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் இணைந்தார்.

1965ல் வெளியான எஙகள் வீட்டுப் பிள்ளையில் மெஹா ஹிட்டான நான் ஆணையிட்டால் பாடல் மூலம் தனது அரசியல் எதிர்காலம் பற்றி சூசகமாக குறிப்பிட்டிருந்தார்.

திமுகவின் பொருளாளராக நீண்ட காலம் இருந்த எம்.ஜி.ஆர், அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி முதல்வராக உதவினார். ஆனால் 1972ல் கருணாநிதி மற்றும் இதர தலைவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால், திமுகவை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பின்னர் அதிமுகவை தொடங்கி வளர்த்தெடுத்த எம்.ஜி.ஆர், 1977 பொதுத் தேர்தலில் வென்று, தமிழக முதல்வரானார். சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, பெரும் புகழ் பெற்றார். உயர் கல்வித்துறையில் தனியார்மயமாக்கலை அறிமுகப்படுத்தினார். தமிழகத்தில் இடஒதுக்கீட்டை 69 சதவீதமாக அதிகரிக்க வகை செய்தார்.

1987ல் உடல்நலக்குறைவு காரணமாக தனது 70 வயதில் காலமானர். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய பங்காற்றிய எம்.ஜி.ஆர் மறைந்த தினம், 1987, டிசம்பர் 24.


Next Story

மேலும் செய்திகள்