"பள்ளிகளுக்கு எதிரில் அறிவு சார் மையம்" - எதிர்ப்பு தெரிவித்த அதிமுக கவுன்சிலர்கள் கைது

x

மேட்டுப்பாளையத்தில், பள்ளிகளுக்கு எதிரில் அறிவுசார் மையம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தச் சென்ற இரண்டு பெண் கவுன்சில்கள் உள்பட அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர், கைது செய்யப்பட்டனர்.

மணி நகரில், நகரவை தொடக்கப்பள்ளி மற்றும் நகரவை உயர்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளிகளுக்கு எதிரில் நகராட்சிக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தில் 5500 சதுர அடியில் நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 85 லட்சம் செலவில் அறிவு சார் மையம் அமைக்க அரசு ஆணை பிறப்பித்தது.

இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு இடத்தை அளவிட வந்தவர்களை தடுத்த நிறுத்திய அதிமுக கவுன்சிலர்கள், கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்