"AI தொழில்நுட்பமும், அணுகுண்டும் ஒன்றுதான்" இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்

x

அணுகுண்டு தயாரித்த அறிவியலாளர் ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கைக் கதையை, பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் படமாக்கி உள்ளார். இந்நிலையில், ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. இதற்கிடையே, இந்தத் திரைப்படம் குறித்து மனம் திறந்துள்ள கிறிஸ்டோபர் நோலன், ஓப்பன்ஹெய்மர் மற்றும் அவரது குழு உருவாக்கிய அணு குண்டு, அறிவியலின் அற்புதமான படைப்பு என்றும், ஆனால் அது மோசமான மற்றும் கொடூரமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், AI என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியை, நவீன உலகம்கண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள நோலன், அதனால் ஏற்படப்போகும் மிக மோசமான தாக்கங்களை கருத்தில் கொண்டு, வல்லுனர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்