வேளாண் பட்ஜெட் - நடிகர் கார்த்தி பாராட்டு.. "'நன்றி' சொல்ல மாட்டேன் இன்னும் பல..." - முதலமைச்சர் ஸ்டாலின் சுவாரஸ்ய பதில்

x
  • நடிகர் கார்த்தியின் பாராட்டுக்கு நன்றி சொல்ல மாட்டேன், விவசாயிகளுக்காக மேலும் பல திட்டங்களை தீட்டுவேன் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
  • வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வத்திற்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டார்.
  • அதில், வேளாண் சுற்றுலா, சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பாராட்டு தெரிவித்தார்.
  • அரசு வழங்கும் கருவிகள் விவசாயிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் எனவும் கார்த்தி கோரிக்கை வைத்தார்.
  • இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், இதுபோன்ற பாராட்டுகளே அரசுக்கு ஊக்கம் என பதிவிட்டார்.
  • தங்களது கருத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டதாக குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், நன்றி சொல்லாமல், விவசாயிகள் மகிழும் விதத்தில் மேலும் பல திட்டங்களை தீட்டுவேன் என கார்த்திக்கு உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்