"பெண்களை அவமதிக்கும் பாஜக-வுக்கு எதிராக"... "சென்னை டூ குமரி" - காயத்ரி ரகுராம் நடைபயணம்

பாஜகவுக்கு எதிராக சென்னையில் இருந்து குமரி வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்... இது குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் "பா.ஜ.க பெண்களை அவமானப் படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், யார் வேண்டுமானாலும் தன்னுடன் இணைந்து கொள்ளலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் தான் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படவில்லை என்றும் காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com