அண்ணாமலைக்கு எதிராக.. இன்று ஈபிஎஸ் எடுக்கும் முக்கிய முடிவு..?

x

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் அதிமுக மாநில மாநாடு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணிகளின் நிலை குறித்தும், நிர்வாக வசதிக்காக சில புதிய மாவட்டங்கள் உருவாக்குவது, சில மாவட்டங்களை இணைத்து ஒரே மாவட்டமாக்குவது, உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர்கள் பேச வாய்ப்புள்ளது.


Next Story

மேலும் செய்திகள்