விக்னேஷ் சிவன் வந்த பிறகு, தனியாக காரில் வந்த நயன்தாரா - சுத்துப்போட்ட ரசிகர்கள் | Nayanthara

x

இயக்குநர் விக்னேஷ் சிவன் வந்து சில மணி நேரத்திற்கு பிறகே, நயன்தாராவின் கார் வந்தது. அதுவரை நயன்தாராவை காண காத்திருந்த ரசிகர்கள் கூட்டத்தால், கார் நகர முடியாமல் நின்றது. அப்போது, காருக்குள் இருந்தவாறு, ரசிகர்களை பார்த்து சிரித்த முகத்துடன் தனது அன்பை நயன்தாரா வெளிப்படுத்தினார். பின்னர், காரில் இருந்து அவர் இறங்கியதும், ரசிகர்கள் சத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நடிகை நயன்தாரா நடித்துள்ள 'கனெக்ட்' படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர்கள் வினய், ஜி.பி.முத்து மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பங்கேற்றனர். திரையரங்கு வளாகத்தில், விக்னேஷ் சிவன், ஜி.பி.முத்துவுக்கு ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்