நெல்சன் மண்டேலாவுக்கு பின் பிரதமர் மோடி தான்.. அழைக்கும் அமெரிக்கா.. எகிறும் மவுசு..!

x

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டின் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உரையாற்ற இருக்கிறார். அதன்படி, அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மோடியின் இரண்டாவது உரை இதுவாகும். இதற்கு முன்னதாக, வின்ஸ்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலா ஆகியோர் மட்டுமே அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் 2 முறை உரையாற்றியவர்கள். அவர்களது வரிசையில் பிரதமர் மோடியும் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது. தனக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பை கவுரவத்துடன் ஏற்று, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்ற ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்