லியோ-க்கு அடுத்து இன்னொரு மாஸ் ஹீரோவுடன் இணையும் திரிஷா | Trisha | trisha movie update | Leo
17 வருடங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. லியோ படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கும் த்ரிஷா, கடந்த 2006ம் ஆண்டு வெளியான "ஸ்டாலின்" திரைப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில், கல்யாண் கிருஷ்ணா இயக்கும் புதிய திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகி, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் படப்பணிகள் துவங்குவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
