லியோவுக்கு பின்.. Interview-வில் கன்பார்ம் செய்த லோகேஷ்.. ரசிகர்கள் எதிர்பாரா அப்டேட்.. பெரிய சம்பவம் காத்திருக்கு

x

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது... இது பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பைப் பார்க்கலாம்...

திரைத்துறைக்குள் காலெடுத்து வைத்த வெகு சில காலத்திற்குள்ளாகவே, காலத்திற்கும் மறக்காத திரைப்படங்களைத் தந்தவர் லோகேஷ் கனகராஜ்...

தனக்கென தனி பாணியைக் கடைப்பிடித்து...தன் திரைப்படங்களுக்கென தனி உலகத்தையே உருவாக்கி... ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக தமிழ் சினிமாவை அசுர வேகத்தில் வளர்த்து வரும் அசாத்திய திறமை கொண்ட இயக்குநர் இவர்...

மாநகரம் துவங்கி, கைதி, மாஸ்டர், விக்ரம் என அனைத்தும் அதிரிபுதிரி ஹிட்...

முன்னணி நடிகர்கள் பலர் இவரது இயக்கத்தில் நடிக்க தவமாய் தவமிருக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்...

நடிகர் விஜயை வைத்து லியோ படத்தை உருவாக்கி வரும் நிலையில், லோகேஷின் அடுத்த நாயகன் யார் என்ற எதிர்பார்ப்பு நமக்கு எழாமலில்லை...

சூப்பர் ஸ்டார் ரஜினியா, மீண்டும் உலக நாயகன் கமலா, அல்லது அல்டிமேட் ஸ்டார் அஜித்தா?... என நாம் யோசித்துக் கொண்டிருக்க அப்படியே தெலுங்கு பக்கம் தலை சாய்த்துள்ளார் லோகேஷ்...

பாகுபலியாய் உலகம் முழுவதும் அறியப்பட்ட தெலுங்கு முன்னணி நடிகர் பிரபாஸ் தான், நம் லோகேஷின் அடுத்த கதாநாயகன்...

தெலுங்கு மட்டுமல்லாது, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் ரசிகர்களைத் தேடித் தந்த திரைப்படம் தான் பாகுபலி...

ஆனால், அதன்பிறகு அவருக்கு ஏனோ இறங்குமுகமாகிப் போனது திரைப்பயணம்...

Saaho, Radhe Shyam திரைப்படங்கள் அவருக்குக் கை கொடுக்கமால் போகவே, இதிகாசப் படமான ஆதிபுரூஷ் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார் பிரபாஸ்...

"சாவு பயத்த காட்டிட்டாய்ங்க பரமா" என்பதைப் போல, ஆதிபுரூஷ் நம் பாகுபலியின் கெரியருக்கு ஆப்படிக்கப் பார்த்தது என்றுதான் சொல்ல வேண்டும்...

திரும்பும் திசையெங்கும் எதிர்மறை விமர்சன அலை வீச, எந்தப்பக்கம் திரைப்பயணக் கப்பலை செலுத்துவது என்று திக்கு தெரியாமல் விக்கித்துப் போனார் பிரபாஸ்...

இந்த சூழலில் தான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், பிரபாசுடன் தான் தனது அடுத்த திரைப்படம் எனவும், இருவரின் கெரியரிலும் மிகப்பெரிய படமாக இது இருக்கும் என்றும் தெரிவித்தார்...

மேலும், லியோ பட நிறைவுக்குப் பிறகு புதிய படத்திற்கான பணிகள் துவங்கும் எனவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து பிரபாசுக்கு Salaar, Project K, Spirit ஆகிய திரைப்படங்கள் வரவுள்ள நிலையில், துவண்டு கிடந்த பிரபாஸ் ரசிகர்களுக்கு இன்பத் தேனாய் வந்து பாய்ந்துள்ளது லோகேஷ் கனகராஜ் தந்த அப்டேட்...


Next Story

மேலும் செய்திகள்