59 ஆண்டுகளுக்கு பின்னர்... - வானில் நிகழவிருக்கும் ஒரு அற்புத நிகழ்வு - மிஸ் பண்ணிடாதீங்க..!

x

வானில் நிகழவிருக்கும் ஒரு அரிய நிகழ்வாக சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் வரும் திங்கள் கிழமை பூமிக்கு அருகே வருகிறது.

ஜூபிடர் என்ற வியாழன் கோள் சூரிய குடும்பத்தில் 5-ம் கோளாகும். மிகப்பெரிய கோளாகவும் அறியப்படுகிற வியாழனில் நம் பூமியைப் போன்று 1300 பூமிகளை அடக்க முடியும் என்றால், அதனது அளவை நீங்களே யோசித்துக்கொள்ளலாம்..

வளிமண்டலம் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆன வியாழன் கோளை சுற்றிய வளையங்கள் தூசித் துகள்களால் ஆனவை.

வியாழனைச் சுற்றிலும் 75-க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் சுற்றி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த பிரமாண்ட கோள்தான் திங்கள் கிழமை பூமிக்கு அருகே வரவிருக்கிறது என நாசா தெரிவித்துள்ளது.

59 ஆண்டுகளுக்கு பின்னர் வானில் நிகழும் ஒரு அரிய நிகழ்வு இது. அன்றைய தினம் மேற்கில் சூரிய அஸ்தமிக்கும் போது, கீழ்திசையில் வியாழன் எழுகிறது.

இவ்வாறு எதிர் எதிர் பக்கங்களில் ஏற்படும் இந்த நிகழ்வின் போது, பூமிக்கு நெருக்கமாக வரும் வியாழனின் தோற்றம் பிரமாண்டமாக இருக்கும்.

வியாழன் கோள் பூமியிலிருந்து சுமார் 965 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். ஆனால் திங்கள் கிழமை இரண்டு கோள்களுக்கும் இடையிலான தொலைவு 365 மில்லியன் கிலோ மீட்டராக குறையவிருக்கிறது.

இதற்கு முன்னதாக கடந்த 1963 ஆம் ஆண்டு இதுபோன்ற நிகழ்வு வானில் நிகழ்ந்திருக்கிறது.

இப்போது 59 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் இந்த அரிய நிகழ்வை பைனாகுலர் வாயிலாக காணலாம்...

அப்போது வியாழனை சுற்றும் 4 நிலவுகளையும் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்