திருமணமாகி 44 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் விபரீத முடிவு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த பிரேம்குமாருக்கும், கீழப்புதூரைச் சேர்ந்த கோபிகாவுக்கும் கடந்த ஜீன் 1 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த கோபிகா, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியதோடு, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story