"4 வருசத்துக்கு அப்புறம் தலைவர் வர்றாரு.. சென்னை சும்மா அதிர போகுது" - வெளியான தேதி

x

ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் கலந்து கொள்ள மார்ச் 2ம் தேதி மகேந்திர சிங் தோனி சென்னை வருகிறார்.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதன்படிபோட்டியானது மார்ச் 31ம் தேதி தொடங்கி, மே 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்நிலையில், போட்டிக்கான பயிற்சியை தொடங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, மார்ச் 2ம் தேதி சென்னை வர இருப்பதாகவும், மார்ச் 3ம் தேதி முதல் சிஎஸ்கே அணியினர் பயிற்சியை தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்