23 வருடங்களுக்கு பிறகு..."மீண்டும் வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி" - ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர்

x

கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சியின் ஆணையராக மாற்றப்பட்ட நிலையில் 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாநகராட்சி யின் ஆணையராக பொறுப்பேற்று கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மற்றும் இணை ஆணையர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் மீண்டும் தனக்கு வாய்ப்பளித்து, வரலாற்று சிறப்புமிக்க மாநகராட்சியின் ஆணையராக நியமித்துள்ளதற்கு நன்றி தெரிவித்தார்.

மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான திட்டங்களை மிகச் சிறப்பாகவும், விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்