விமானப்படை விமானத்தில் 'ஹனுமன்' படம் நீக்கம்... ஹிந்துஸ்தான் ஏரோனேட்டிக்ஸ் நிறுவனம் விளக்கம்

x
  • ஹிந்துஸ்தான் ஏரோனேட்டிக்ஸ் நிறுவனத்தின் சார்பாக பெங்களூரில் நேற்று ஏரோ இந்தியா 2023 என்ற தலைப்பில் விமானக் கண்காட்சி தொடங்கியது.
  • இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்து வான் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
  • இந்த கண்காட்சியில் இடம்பெற்ற எச்.எல்.எஃப்.டி 42 என்ற போர் விமானத்தின் இறக்கையில் 'புயல் வருகிறது' என்ற வாசகத்துடன் 'ஹனுமன்' படம் பொறிக்கப்பட்டிருந்தது.
  • இது சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து போர் விமானத்தில் பொறிக்கப்பட்டிருந்த 'ஹனுமன்' படத்தை ஹிந்துஸ்தான் ஏரோனேட்டிக்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது.
  • விமானத்தின் வலிமையை காட்டுவதற்காக மட்டுமே 'அனுமன்' படம் பொறிக்கப்பட்டதாகவும், வேறு காரணம் இல்லை என்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்