அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் கடத்தப்பட்ட சம்பவம் -விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

x

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலர், அவரது மகன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்த அதிமுக பெண் கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் ஆகியோரை கடந்த 24-ஆம்

முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் மிரட்டி காருடன் கடத்தி சென்றனர். ரோஜாவிடம் இருந்து 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்ட அக்கும்பல் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்கையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அன்றைய தினம் இரவே ரோஜா தனது மகனுடன்

வீடு திரும்பினார். கடத்தல் கும்பலை சேர்ந்த டிரைவர் பரிதாபப்பட்டு தங்களை தப்ப விட்டதாக ரோஜா போலீசாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார் ஆள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய பல்லவாடா கிராமத்தை சேர்ந்த

சுரேந்தரை மடக்கி பிடித்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், இதில் தொடர்புடைய சந்திரசேகர் என்பவரை தேடிவருகின்றனர். அதிமுக பெண் கவுன்சிலர் ரோஜாவின் கணவர் ரமேஷ்குமாருடனான

நிலத்தகராறு காரணமாக இந்த கடத்தல்

சம்பவம் நடைபெற்றதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்