அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் - இன்று முதல் வேட்புமனு தாக்கல் | admk | general secretary election

x
  • அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று வேட்புமனு தாக்கல் ஆரம்பிக்கப்படும் என்றும், நாளை கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
  • வேட்பு மனு மீதான பரிசீலனை 20ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும்,
  • வேட்பு மனுவை 21ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை திரும்ப‌ப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 26ஆம் தேதி காலை 8 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும்,
  • பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 27ஆம் தேதி காலை 9 மணி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்பமனுக்களைப் பெற்று, விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதிமுக தேர்தல் ஆணையாளர்களான பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் நத்தம் விசுவநாதன் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்