அதிமுக வேட்பாளர் அறிவிப்பு - யார் இந்த கே.எஸ்.தென்னரசு?

அதிமுக வேட்பாளர் அறிவிப்பு - யார் இந்த கே.எஸ்.தென்னரசு?
x

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

கே.எஸ்.தென்னரசு, ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய்தோட்டம் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு வயது 65.

1988-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர்,

1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணை செயலாளர்,

1995-ம் ஆண்டு நகர செயலாளர்,

1999-ம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்,

2000-ம் ஆண்டு மீண்டும் ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர்,

2010-ம் ஆண்டு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர்,

2011-ம் ஆண்டு முதல் ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார்.

2001 & 2016-ம் ஆண்டு ஈரோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

ஸ்கிரீன் பிரிண்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

25 ஆண்டுகளாக ஈரோடு மாவட்ட சுமைதூக்குவோர் மத்திய சங்க பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்