அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு - உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

x
      • அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன
      • இதற்கு தடை விதிக்க கோரி பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
      • அதில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிவிட்டு, சட்ட விரோதமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது
      • இது, நீதிமன்ற நடவடிக்கையை மீறும் செயல் மட்டுமல்லாமல், நீதிமன்ற கண்ணியத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல் என்றும் கூறப்பட்டுள்ளது
      • பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, எக்காரணமும் இல்லாமல், பொதுச்செயலாளர் பதவிக்கு அவசரமாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
      • இவ்வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்