ஈரோடு இடைத்தேர்தல்.. வேட்பாளர் யார்? - ஜிகே வாசன் அடித்த கமெண்ட்.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜெயக்குமார்

ஈரோடு இடைத்தேர்தல்.. வேட்பாளர் யார்? - ஜிகே வாசன் அடித்த கமெண்ட்.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜெயக்குமார்
x


காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவர் மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி ஆரம்பமாகிறது.




அறிவிப்பு வெளியான உடனே திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகளும் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுகவில் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட, மறுபுறம் பாஜக தலைவர் அண்ணாமலை உடனே குழு அமைத்து அனல் கிளப்பினார். இச்சூழலில் தான் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனுடன் ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.





ஏனென்றால், கடந்த முறை அதிமுக,பாஜக கூட்டணியில் இடம்பெற்ற தமாகா-வுக்கு தான் ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. தமாகா சார்பில் யுவராஜா அதிமுக சின்னமான இரட்டை இலையில் போட்டியிட்டார். இப்போது அதிமுகவில் இருக்கும் இரு துருவ மோதலால், சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈபிஎஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், ஓபிஎஸ்ஸும் எதிர்த்து நிறுத்தலாம் என சொல்லப்படுகிறது. இதனால் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்படும். இதனை தவிர்க்கவே, பொதுவான தமாகா சார்பில் வேட்பாளரை நிறுத்தலாம் என ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் உறுதியாகவில்லை.




இச்சூழலில்தான் இந்தச் சந்திப்பு முக்கியவத்துவம் பெறுகிறது. இதற்கு ஓபிஎஸ் தரப்பின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. இதற்கு நடுவே ஜிகே வாசனின் செய்தியாளர் சந்திப்பு, கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதைச் சூசகமாக உணர்த்தியுள்ளது. அப்போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, நகைச்சுவையாக ஜிகே வாசன் பேசியது அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. அதிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குலுங்கி குலுங்கி சிரித்தது கவனம் ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்