சி.பா.ஆதித்தனாரின் 42-வது நினைவு நாள் - அரசியல் கட்சியினர் மரியாதை

x

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், த.மா.கா பொதுச்செயலாளர் ராஜன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் ஜீவன், சுப்பிரமணி தலைமையில் வந்த அக்கட்சியினர், மாலை அணிவித்து வீர வணக்கம் கோஷங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்