"அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு.." பாடல் மூலம் தமிழர்களை மயக்கிய குரல் காற்றில் கலந்தது காலமானார்..
பிரபல திரைப்பட பாடகர் பம்பா பாக்யா உடல்நலக் குறைவால் காலமானது திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்திரன் திரைப்படத்தின் புள்ளினங்கால், பிகில் திரைப்படத்தில் காலமே காலமே, பொன்னி நதி உள்ளிட்ட புகழ்பெற்ற பாடல்களைப் பாடிய இவர், தனது 49வது வயதில் உடல்நலக் குறைவால் மறைந்தார். இவர் இறப்பு குறித்து கத்திஜா ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது மறைவுக்குப் திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story
