அத்திக் அகமது கொலை வழக்கு ..காவல் துறைக்கு பறந்த நோட்டீஸ் - "உபி அரசுக்கு ஏற்பட்ட சிக்கல்"

x

உத்தர பிரதேசத்தில் போலீஸ் காவலில் இருந்த அதிக் அகமது, அஷ்ரப் அகமது ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு உத்தர பிரதேச டிஜிபி, பிரயாக்ராஜ் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பலியானவர்கள் கொல்லப்பட்ட நேரம், கொல்லப்பட்ட இடம், அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணம், அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, அவர்களின் உடற்கூறு ஆய்வறிக்கை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்