அதானிக்கு ஆசியாவிலும் போச்சு..அசால்ட்டாக தட்டி பறித்த அம்பானி - "ஒன்.. ஒன்.. நம்பர் ஒன்..!"

x

ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அதானியை பின்னுக்கு தள்ளி, அந்த இடத்தை கைப்பற்றியிருக்கிறார், முகேஷ் அம்பானி

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இதில் பங்கு சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கெளதம் அதானியின் பங்குகள் சரிய தொடங்கின.

ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 7.44 லட்சம் கோடி ரூபாயை இழந்து,

டாப் -10 உலக பணக்கார தரவரிசை பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்போது,

உலக பணக்காரர் வரிசையில் 15 வது இடத்திற்கு சரிந்துள்ளார், அதானி.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி சுமார் 6.84 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார்.

இதன் மூலம் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வந்த அதானியை பின்னுக்கு தள்ளி,

இரண்டாவது இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்