"பழனியில் கூடுதலாக ரோப் கார் பாதை.." - அமைச்சர் சேகர்பாபு

x

சென்னை வடபழனி முருகன் கோயிலில் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, சூரிய ஒளி மின் தகடு நிலையத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் சூரிய மின் சக்தியால், மின் தேவை பெரும் முதல் திருக்கோயிலாக, வடபழனி கோயில் அமைந்துள்ளதாக கூறினார். இதனை தொடர்ந்து மற்ற கோயில்களிலும் சோலார் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பழனி முருகன் கோயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க, கூடுதலாக ரோப் கார் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்...


Next Story

மேலும் செய்திகள்