பொங்கல் பண்டிகை ஒட்டி கூடுதல் மெட்ரோ ரயில் சேவை - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு | Metro | Train

x

பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பயணம் செய்ய வசதியாக கூடுதல் மெட்ரோ ரயில் ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 13, 14-ஆம் தேதிகளில், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஐந்து நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள், இரவு 10 மணி வரை இயக்கப்படும் என்றும், வழக்கம்போல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் ரயில்கள், நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 18-ஆம் தேதி காலை 5 மணிக்கு பதிலாக, அதிகாலை 4 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்