தலைக்கேறிய கஞ்சா போதை - நண்பனே எமனாய் மாறிய பயங்கரம்

x

கடையநல்லூர் அருகே பொய்கை கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமியும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த அவரது நண்பர் செல்வகுமாரும் சேர்ந்து, மது மற்றும் கஞ்சாவை பயன்படுத்தியுள்ளனர். போதை தலைக்கேறவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றியதில், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். பின்னர், அருகில் கிடந்த கல்லை எடுத்து, கருப்பசாமி தலையில் தாக்கிவிட்டு, செல்வகுமார் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில், கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய செல்வகுமாரை தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்