அதானி விவகாரம்... "நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.." - அமித் ஷா ஓபன் டாக் | Amit Shah

x

அதானி விவகாரத்தில் மறைப்பதற்கோ, அச்சப்படுவதற்கோ எதுவும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்ற அமித்ஷா, பிரதமரின் உரையை கேட்க சில அரசியல் கட்சிகள் தயாராக இல்லை என்றார். மற்ற கட்சிகளுடன் அமர்ந்து விவாதம் நடத்துவதில் பாஜகவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அதற்கான முன்னெடுப்பை அனைவராலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் ஏழை மக்களை சென்றிருப்பதுதான் மாற்றம் என்ற அமித் ஷா, 2024 மக்களவைத் தேர்தலில் போட்டி என்பதே இல்லை என்றார். மூன்று மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதாகவும், அப்போது, ராகுல்காந்தியின் நடைபயணம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை பாரக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பாஜகவை பொறுத்தவரை அதானி விவகாரத்தில் மறைப்பதற்கோ, அச்சப்படுவதற்கோ எதுவும் இல்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்