மீண்டெழும் அதானி குழுமம்... கடன்களை செலுத்தியதால் உயரும் பங்குகள்

x
  • 21 ஆயிரத்து 690 கோடி ரூபாய் அளவிலான கடன்களை அதானி குழுமம் முன்கூட்டியே செலுத்தியுள்ளது.
  • ஜனவரி 24இல் வெளியான ஹிண்டனர்பர்க் அறிக்கையினால், அதானி குழும பங்கு விலைகள் 60 சதவீதம் வரை சரிந்தால், முதலீட்டாளர்களுக்கு 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
  • அதானி குழுமத்தின் மொத்த கடன் சுமை ஜனவரியில் 2.21 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில், 21 ஆயிரத்து 690 கோடி ரூபாய் அளவிலான கடன்களை அதானி குழுமம் முன்கூட்டியே செலுத்தி, அதற்கு ஈடாக அடமானம் வைக்கப்பட்ட பங்குகளை மீட்டுள்ளது.
  • இதில் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த பெறப்பட்ட 4 ஆயிரத்து 90 கோடி ரூபாய் கடன்களுன் அடங்கும். அதானி குழுமம் கடந்த மாதத்தில் இரண்டு கட்டமாக 16 ஆயிரத்து 577 கோடி ரூபாய் அளவிலான கடன்களை முன்கூட்டியே திருப்பி செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • இதன் விளைவாக மார்ச் 10 நிலவரப்படி, அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 9.3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • இன்று அதானி குழும பங்கு விலைகள் 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்