அதானி குழுமத்தில் பல ஆயிரம் கோடி டாலர்கள் முதலீடு... சட்ட விதிமுறைகளை மீறவில்லை - மொரீசியஸ் அரசு

x
  • பல்வேறு முறைகேடுகளில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளதாக ஜனவரி 24இல் வெளியான ஹின்டன்பர்க் அறிக்கையில் விவரிக்கப்பட்டிருந்தது.
  • இதைத் தொடர்ந்து அதானி நிறுவன பங்குகள் விலை 60 சதவீதத்திற்கும் அதிகம் சரிந்துள்ளன.
  • அதானி நிறுவனம் மீது இந்திய பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரணை மேற்கொண்டுள்ளது.
  • அதானி நிறுவனங்களில், மொரிசியஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 38 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்துள்ளன.
  • இவற்றை பற்றி முதல் கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட மொரிசியஸின் நிதி சேவைகள் ஒழுங்குமுறை ஆணையம், இவை மொரிசியஸின் சட்ட விதிகள் எதையும் மீறவில்லை என்று அறிவித்துள்ளது.
  • இந்நிலையில் அதானி நிறுவனங்கள் பற்றிய ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செபி அமைப்பு இந்த வார இறுதியில் சமர்பிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்