நிருபருடன் நடிகை டாப்சி வாக்குவாதம்..
ஓ.டி.டி. தளங்களுக்கான விருது விழாவில், நிருபருடன் நடிகை டாப்ஸி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓ.டி.டியில் வெளியான படங்களுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில், டோபாரா படத்தின் எதிர்மறை விமர்சனம் குறித்து, நடிகை டாப்சியிடம் நிருபர் கேள்வி எழுப்பினார். இதனால் நிருபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டாப்சி, உண்மை நிலவரங்களை தெரிந்து கொண்டு, நன்கு பயிற்சி எடுத்து விட்டு கேள்விகளை கேளுங்கள் என விமர்சித்தார்.
