ரசிகர்களிடம் சிக்கிய நடிகை ஷகீலா - காப்பாற்றிய கஞ்சா கருப்பு

x

மதுரையில் நடிகை ஷகீலாவை சூழ்ந்த ரசிகர்களை பவுன்சர்களின் உதவியுடன் நடிகர் கஞ்சா கருப்பு பத்திரமாக‌ அனுப்பி வைத்தார்.மதுரையில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு விழா, சிவாஜி கணேசனின் 75-ஆவது வைர விழா, துணை நடிகர், நடிகையர், உதவியாளர் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழா ஆகியவை நடைபெற்றன. இந்த விழாவில் நடிகை ஷகிலா, நடிகர்கள் கஞ்சா கருப்பு, கிங் காங் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள், நாடகக் கலைஞர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து, ஷகீலா புறப்பட்டபோது, ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவர் திகைத்து நின்றபோது, நடிகர் கஞ்சா கருப்பு, பவுன்சர்கள் உதவியுடன் ஷகீலாவை பாதுகாப்பாக காரில் ஏற்றி வழி அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்