சமந்தாவுக்கு என்ன ஆச்சு? - வெளியான அதிர்ச்சி போட்டோ | Samantha | Samantha Photo

x

நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து உருக்கமான பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், யசோதா ட்ரெய்லருக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த அன்புதான், சவால்களைச் சமாளிக்க வலிமை அளிப்பதாகவும் கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனக்கு மையோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார். முழுமையாக குணம் அடைந்த பின்னர் வெளியே சொல்லலாம் என்று நினைத்த‌தாகவும், ஆனால் குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் போராடிக் கொண்டிருப்பதாகவும், விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் சமந்தா குறிப்பிட்டுள்ளார். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும், நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு என்று கூறியுள்ள சமந்தா, இதுவும் கடந்து போகும் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்