மாடுபிடி வீரர்களுடன் நடிகர் சூர்யா.. கலைப்புலி எஸ். தாணு ட்விட்டரில் வாழ்த்து

நடிகர் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா பிரசாத் இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்திற்கு, மத்திய அரசு 5 தேசிய விருதுகளை அறிவித்தது.
x

நடிகர் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா பிரசாத் இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்திற்கு, மத்திய அரசு 5 தேசிய விருதுகளை அறிவித்தது. நடிகர் சூர்யா, நடிகை அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் வாடிவாசல் படப்பிடிப்பில், மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி பெற்றபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்