நடிகர் யோகி பாபு மலையாள திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.

x

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து ரசிகர்களிடையே குறுகிய காலத்தில் பெரும் ஆதரவை பெற்றுள்ள நடிகர் யோகி பாபு, மலையாள திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இயக்குனர் விபின் தாஸ் இயக்கும், குருவாயூர் அம்பல நடையில் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அவர் மலையாள திரையுலகில் தடம்பதிக்கிறார். ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்ற திரைப்படத்திற்கு பிறகு விபின் தாஸ் இயக்கத்தில் குருவாயூர் அம்பல நடையில் என்ற திரைப்படம் உருவாகிறது. இந்நிலையில், யோகி பாபுவுக்கு மலையாள திரைப்பட துறைக்கு வரவேற்பு என்ற பெயரில் விபின் தாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்