"வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்த நடிகர் யோகி பாபு" - தீயாய் பரவும் புகைப்படம்

x

சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் தயாராகும் குறும்படத்தில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்து வருகிறார்.

வீடுதோறும் சென்று குப்பைகளை தரம் பிரிக்கும் தூய்மை பணியாளர் வேடத்தில் யோகிபாபு நடித்துள்ளார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் தயாராகி வரும் இக்குறும்படத்தின் படப்பிடிப்பில், யோகிபாபு கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்